கொக்கெய்ன் போதைப்பொருள் கைமாற்றத்தில் முக்கிய பங்கு வகித்ததாக அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டுவர்ட் மெக்கில் அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதன்போது அவரிடம் இருந்து சுமார் 5.50 கோடி மதிப்புள்ள கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அவர் கடத்தப்பட்டதாக கூறிய சம்பவம் முற்றிலும் நாடகம் என்பதுடன், அவரை கடத்தியதாக கூறப்பட்ட நபர்கள் அனைவருமே போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
ஸ்டுவர்ட் மெக்கில் அவுஸ்திரேலிய அணியில் சுழற் பந்துவீச்சாளராக 1998 முதல் 2008 வரை 44 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதில் 208 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.
சர்வதேச அரங்கில் அவுஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வோர்னின் ஆதிக்கத்தால், அவருக்கு போட்டியாக மெக்கில் அணியில் தொடர்ந்து இடம் பெற முடியாமல் போனது.