Monday, July 21, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிள் சடலமாக மீட்பு

காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிள் சடலமாக மீட்பு

காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் கடமையின் நிமித்தம் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல் போன நிலையில் தேடும் பணி இடம்பெற்று வந்தது.

நேற்று மாலை வரை காணாத நிலையில், இன்று 2ம் நாளாக பணி முன்னெடுக்கப்ட்டது.

இதன்போது, புது ஐயங்குளத்திலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சதுரங்க எனும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார். அவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தவர் ஆவார்.

சடலம் நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைகளை தொடர்ந்து உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles