Tuesday, November 19, 2024
25.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF உடனான மீளாய்வு குறித்த பேச்சுவார்த்தை இன்று முதல் ஆரம்பம்

IMF உடனான மீளாய்வு குறித்த பேச்சுவார்த்தை இன்று முதல் ஆரம்பம்

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்திட்டதின் முதல் மீளாய்வு குறித்து உள்ளூர் அதிகாரிகள் இன்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரிதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளனர்.

இதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழு எதிர்வரும் செப்டெம்பர் 27 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும்.

IMF குழு இலங்கை மத்திய வங்கி, திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் மீளாய்வின் ஒரு பகுதியாக கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சர்வதேச நாணய நிதிய குழு கலந்துரையாடல்களை நடத்தும்.

இந்த ஆண்டு மார்ச் மாதம், இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக 2.286 பில்லியன் ரூபா (சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) இன் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் 48 மாத நீட்டிக்கப்பட்ட ஏற்பாட்டிற்கு IMF நிர்வாக சபை ஒப்புதல் அளித்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles