Monday, July 21, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழ். வைத்தியசாலைக்குள் ஊழியர்களுக்கு கைப்பேசி பயன்படுத்த தடை

யாழ். வைத்தியசாலைக்குள் ஊழியர்களுக்கு கைப்பேசி பயன்படுத்த தடை

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கைப்பேசி பாவனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

வைத்தியசாலைக்குள் அத்தியாவசிய தேவையின்றி, ஸ்மார்ட் கைப்பேசியை பயன்படுத்த படம் மற்றும் காணொளி பதிவு செய்வதற்கும் சமுக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நோயாளர்களின் நலன் கருதி, இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடமை நேரத்தில் தாதியர்கள், சுகாதார உதவியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், நோயாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles