நீதி மன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு, குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையையும் மீறி பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலையில் பூசை வழிபாடுகளுக்காக சென்ற பௌத்த குருமாரின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அவமானப்படுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சில பிக்குகள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.