Monday, July 21, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅஸ்வெசும கொடுப்பனவை நிறுத்த திட்டம்

அஸ்வெசும கொடுப்பனவை நிறுத்த திட்டம்

மூன்று வருடங்களுக்குள் அஸ்வெசும கொடுப்பனவை நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சர் அனுப ​பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டத்தில் பயனடையும் நபர்களை வலுப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, சமுர்த்தி பிளஸ் (SAMURDHI PLUS) வேலைத்திட்டத்தின் கீழ் அவர்களை பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக பதில் அமைச்சர் அனுப ​பெஸ்குவல் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles