Sunday, February 15, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலையானார் சசித்ர

பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலையானார் சசித்ர

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்க இன்று (13) அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

கொழும்பு பிரதான நீதவான் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இவ்வாறு அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் .

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கிடைத்த ஒலிப்பதிவு தொடர்பான குரல் பரிசோதனைக்காக சசித்திர சேனாநாயக்க அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்

சசித்ர சேனாநாயக்கவின் தலையீட்டை உறுதிப்படுத்தும் வகையில் ஒலிப்பதிவை குரல் பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிடுமாறு சட்டமா அதிபர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை கருத்திற்கொண்ட கொழும்பு பிரதான நீதவான், முன்னாள் கிரிக்கெட் வீரரை அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தினால் குரல் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

அவர் இன்று காலை பொலிஸ் பாதுகாப்புடன் அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles