எரிபொருள் விலையை நாளாந்தம் திருத்தும் முறைமையை அடுத்த வருடம் முதல் அமுலாக்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பெற்றோலிய கூட்டுத்தாபன விநியோகஸ்தர்கள் சங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில், எரிபொருள் விநியோகம் மற்றும் புதிய எரிபொருள் நிலையங்களின் எதிர்கால அபிவிருத்தி குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.