இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேங்காய்களுக்கு GI சான்றிதழ் பெறுவதற்கான சாத்தியக்கூறு உள்ளதா என்பது குறித்து தற்போது ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஐரோப்பிய ஆணைக்குழு இலங்கை கறுவாவுக்கான முதல் புவியியல் அடையாளச் சான்றிதழை வழங்கியது. இது உலக சந்தையில் சிலோன் கறுவாவுக்கான வர்த்தக நாமத்தை பயன்படுத்துவதை சாத்தியமாக்கியது.
எனவே, உள்ளூர் தென்னங்கன்றுகளுக்கு இச்சான்றிதழைப் பெற்றுக் கொள்ள முடிந்தால், தென்னை தொடர்பான பொருட்களை ஏற்றுமதி செய்வதில் இலங்கைத் தேங்காயைப் பயன்படுத்த முடியும் என்பதுடன், இதன் மூலம் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய்கள் உயர் தரம் வாய்ந்தவை என நுகர்வோர் நம்பிக்கை கொள்வர் என தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்தார்.
மேலும், இந்த சிலோன் தேங்காய் வர்த்தக நாமத்தைப் பெறுவதன் மூலம், இலங்கையில் தேங்காய்களுக்கு பாரிய கேள்வி ஏற்படும்இ இதனால் தேங்காய் தொடர்பான பொருட்களின் பன்முகத்தன்மை அதிகரித்து, அவற்றுக்கு அதிக விலை கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.