ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்றின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி 228 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் பெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுபெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 02 விக்கெட்டுக்களை இழந்து 356 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக, விராட் கோலி 122 ஓட்டங்களையும், கே.எல்.ராகுல் 111 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 56 ஓட்டங்களையும், சுப்மன் கில் 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி பெற்ற 47ஆவது சதம் இதுவாகும்.
இதன்படி, விராட் கோலி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 13,000 ஓட்டங்களை கடந்துள்ளார்.
விராட் கோலி 94 பந்துகளில் 09 நான்கு ஓட்டங்கள், 03 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 122 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
அத்துடன், கே.எல்.ராகுல் பெற்ற 06ஆவது சதம் இதுவாகும்.
கே.எல்.ராகுல் 106 பந்துகளில் 12 நான்கு ஓட்டங்கள், 02 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 111 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில், பாகிஸ்தான் அணியின் ஷஹீன் ஷா அப்ரிடி 79 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும், ஷதாப் கான் 71 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 10 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்தநிலையில், 357 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
அணிசார்பில் அதிகபடியாக, பகர் ஷமான் 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் இந்திய அணியின் குல்தீப் யாதவ் 25 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.