Tuesday, July 22, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுமியை வன்புணர்ந்த அதிபருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

சிறுமியை வன்புணர்ந்த அதிபருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

பாடசாலையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அதிபர் ஒருவருக்கு கடின உழைப்புடன் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மன்னார் செல்வநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் அதிபர் பத்து வயது சிறுமியை வன்புணர்வு செய்த சம்பவம் தொடர்பில் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம் மிஹால் நேற்று (11) சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், சிறுமிக்கு 25000 ரூபா அபராதமும் 1 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் 23 ஆம் திகதி தான் வன்புணரப்பட்டதாக சிறுமி பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த அதிபரை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles