‘ஹரக் கட்டா’ என்று அழைக்கப்படும் குற்றக் செயல்களுடன் தொடர்புடைய குழுவின் தலைவர்இ கடந்த ஞாயிற்றுக்கிழமைஇ குற்றப் புலனாய்வுத் துறையின் தடுப்பில், இருந்து தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.
இந்த முயற்சிக்காக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உதவியுள்ளார் என்று குற்றப்புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த கான்ஸ்டபிளின் உதவியுடன், அதிகாரிகளின் தேநீரில் மயக்க மருந்து கலந்ததாக ஹரக் கட்டா விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
அத்துடன் கழிவறைக்கு சென்று திரும்பும்போது அவரின் கைவிலங்கு கழற்றப்பட்டதாகவும் இதன்போதே விசேட அதிரடிப்படை வீரர் ஒருவரின் துப்பாக்கியை தாம் பறிக்க முயற்சித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில் குறித்த சம்பவத்தை அடுத்து ஹரக் கட்டாவுக்கு உதவியதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.