Sunday, April 12, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுரங்குகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டம்

குரங்குகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டம்

இலங்கையில் பொதுவாகக் காணப்படும் Toque Macaque எனும் குரங்குகளின் சனத்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கான யோசனையொன்று அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டு உரிய வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாத்தளை மற்றும் மகுலேமடை பகுதிகளிலுள்ள விவசாய பிரதிநிதிகளை சந்தித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Toque Macaque நாடு முழுவதும் பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles