Sunday, November 17, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகால்நடைகளுக்கான மருந்து விலையை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

கால்நடைகளுக்கான மருந்து விலையை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

கால்நடை வளர்ப்பில் பயன்படுத்தப்படும் சில வகை மருந்துகளின் விலை வேகமாக அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு கால்நடை வைத்தியர்களுக்குப் பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (11) விவசாய அமைச்சில் இடம்பெற்றது.

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல, கால்நடை அபிவிருத்தி பிரிவின் அதிகாரிகள் மற்றும் கால்நடை வைத்தியர்கள் குழுவினர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பன்றி, செம்மறி, ஆடு, கோழி போன்ற விலங்கு வளர்ப்பின் போது தொற்று நோய்களை தடுக்கும் மருந்துகளை பயன்படுத்துவது கட்டாயம் எனவும், ஆனால் தற்போது சந்தையில் குறித்த மருந்துகளின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles