வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன், ரஷ்ய எல்லைப்பகுதியான காஸனை அடைந்துள்ளதாக ஜப்பானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்ய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வடகொரிய மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பிற்காக வடகொரிய ஜனாதிபதி பயணப்படும் ரயிலில் ரஷ்யாவுக்கு அளிக்கவிருக்கும் ஆயுதங்கள் ஏற்றப்பட்டுள்ளதாகவும், இந்த கவச ரயில் ரஷ்யாவை நோக்கி புறப்பட்டிருப்பது, ரஷ்யா- வடகொரியா இடையே வளர்ந்து வரும் இராணுவ ஒத்துழைப்பை பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, எதிர்வரும் நாட்களில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ரஷ்யாவின் கிரம்ளின் மாளிகை அறிவித்துள்ளது.