Thursday, July 3, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉறக்கத்தில் உயிரிழந்த 4 வயது சிறுமி

உறக்கத்தில் உயிரிழந்த 4 வயது சிறுமி

உறங்கும் போது நான்கு வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் ஹொரனை பகுதியில் பதிவாகியுள்ளது.

வழமையைபோன்று சிறுமி உறங்கும்போது, அவர் சிறுநீர் கழித்தமையினால் மாற்றுடை அணிவதற்காக தாய் சிறுமியை நித்திரையிலிருந்து விழிக்க செய்துள்ளார்.

எனினும் சிறுமி விழிக்காமல் உறங்கியே இருந்துள்ளதுடன், உடல் குளிர்மையடைந்திருந்துள்ளது.

அதனால் சிறுமியின் நிலைமை குறித்து கணவரிடம் தாய் அறிவித்தமையை அடுத்து ஹொரண ஆதார வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமிக்கு சிகிச்சையளித்த வைத்தியர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles