ரயில் லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் நேற்று (11) நள்ளிரவு முதல் பல ரயில் நிலையங்களில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரச்சனையை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம்.சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (12) காலை பல ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து துணை பொது மேலாளர் எம்.ஜே. இதிபொலகே தெரிவித்தார்.