Saturday, February 14, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF உடனான கலந்துரையாடலுக்கு அனைத்தும் தயார்

IMF உடனான கலந்துரையாடலுக்கு அனைத்தும் தயார்

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து நடத்தப்படும் கடன் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் சுற்று எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும், இரண்டாவது தவணையாக சுமார் 330 மில்லியன் டொலர்கள் பெறப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ மட்டத்தில் இந்த கலந்துரையாடல்களில் நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினர் பங்கேற்கவுள்ளனர்.

இறுதிக் கலந்துரையாடலும் ஆரம்பக் கலந்துரையாடலும் ஜனாதிபதியை நிதி அமைச்சராகக் கொண்டு நடத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles