ரயில்வே ஊழியர்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் போராட்டத்தை கைவிட்டதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.