Thursday, November 27, 2025
23.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி ரணிலின் செயற்பாட்டிற்கு கேரள முதல்வர் வாழ்த்து

ஜனாதிபதி ரணிலின் செயற்பாட்டிற்கு கேரள முதல்வர் வாழ்த்து

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் கேளர முதலமைச்சர் பிரனய் விஜயை சந்தித்தார்.

கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சந்திப்பில்
கேரளாவுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா அபிவிருத்திகளை மேற்கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டது.

மேலும் 1970ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள மலையக மக்கள் 1480 குடும்பம் கேரளாவில் மீள்குடியேற்றப்பட்டனர். இவர்கள் R.P.L( Rehabilitation Plantation limited) நிறுவனத்திலும், கேரளா வன அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திலும் தொழில்புரிகின்றனர். அவர்கள் எதிர்கொள்ளும் பிர்சசினைகளுக்கு தீர்வுகாண்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துவரும் பணிகளுக்கு கேரள முதல்வர் பிரனய் விஜயன் வாழ்த்துக் கூறியதுடன், ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கைக்கு வருகைதருமாறு விடுத்த அழைப்பை ஏற்று இலங்கை வருவதாகவும் உறுதியளித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles