Friday, August 22, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாதலனின் தாக்குதலுக்குள்ளான யுவதி உயிரிழப்பு

காதலனின் தாக்குதலுக்குள்ளான யுவதி உயிரிழப்பு

கடந்த 02ஆம் திகதி ஹோட்டல் அறையில் காதலனால் தாக்கப்பட்ட யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

எல்லக்கல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றதுடன், காதலின் தாக்குதலில் படுகாயமடைந்த யுவதி மயக்கமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வத்துபிட்டியல அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அவர் நேற்று (10) அதிகாலை உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

காதலி வேறொரு இளைஞனுடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 29 வயதுடைய காதலன், குறித்த யுவதியை (28)கொடூரமாக தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles