Friday, October 10, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிக விலைக்கு அரிசி விற்ற 400 கடைகளுக்கு எதிராக நடவடிக்கை

அதிக விலைக்கு அரிசி விற்ற 400 கடைகளுக்கு எதிராக நடவடிக்கை

அதிக விலைக்கு அரிசி விற்கும் இடங்கள் அல்லது இருப்பு வைக்கப்பட்டுள்ள இடங்களைக் கண்டறிய நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த சுமார் 400 கடைகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள சில்லறை மற்றும் மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் களஞ்சியசாலைகளை அதிகாரிகள் ஏற்கனவே ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன்படி, முறைப்பாடுகள் கிடைக்கப்பெறும் அனைத்து கடைகளிலும் எதிர்வரும் நாட்களில் விசேட விசாரணை மற்றும் சோதனை நடத்தப்படும் எனவும், அவ்வாறான கடைகள் தொடர்பான தகவல்களை 1977 என்ற குறு தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் நுகர்வோர் அதிகாரசபை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles