நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு ஒகஸ்ட் மாத இறுதியில் 4.4 சதவீதத்தால் 3,598 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைக்கு அமைய கையிருப்பு ஜூலை மாதத்தில் 3,765 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது, இதில் சீனாவின் மக்கள் வங்கியிடமிருந்து சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் இடமாற்று வசதியும் அடங்கும்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட இடமாற்று வசதியில் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை திருப்பி செலுத்தியதை அடுத்து இந்த குறைப்பு ஏற்பட்டுள்ளது.