Saturday, November 16, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுவர்களின் மனநலப் பிரச்சினைகளைத் தீர்க்க புதிய வேலைத்திட்டம்

சிறுவர்களின் மனநலப் பிரச்சினைகளைத் தீர்க்க புதிய வேலைத்திட்டம்

பாடசாலை மாணவர்களின் மனநலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்கள் பல மனப்பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும், அதீத கோபம் மற்றும் மனப்பிரச்சினைகளை தீர்க்கும் அறிவு இல்லாமை பாரிய பிரச்சினை எனவும் விசேட மனநல மருத்துவர் ரூமி ரூபன் குறிப்பிடுகின்றார்.

இதன் கீழ், குழந்தைகளின் மனநலப் பிரச்னைகளைக் கண்டறிய ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படும்.

கல்வி அமைச்சுடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், சில மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles