Tuesday, February 10, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகைப்பேசிகளை திருடிய இரு பல்கலைக்கழக மாணவர்கள் கைது

கைப்பேசிகளை திருடிய இரு பல்கலைக்கழக மாணவர்கள் கைது

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டின் கீழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருளுக்கு அடிமையாகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் செல்வோரிடம் தொலைபேசிகளை அபகரித்து விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் இரு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles