உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நேற்று (07) நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 103 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அதன்படி, முறிகளை மீள விநியோகிக்க இணங்காத ஊழியர் நிதியங்கள் மீது 30 வீத வரி விதிக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதி கிடைத்துள்ளது.