Friday, July 11, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஈஸ்டர் தாக்குதல் தொடர்பான மீள் விசாரணையை ஷானியிடம் ஒப்படையுங்கள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான மீள் விசாரணையை ஷானியிடம் ஒப்படையுங்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைத் தன்மை மீண்டும் மீண்டும் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதாகவும்இஉயர்த்த ஞாயிறு தொடர்பான மீள் விசாரணையை இது தொடர்பான அறிவும் அநுபவமும் உள்ள ஷானி அபேசேகரவிடம் ஒப்படைக்குமாறும்,2019 பொதுஜன பெரமுனவுக்கு இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரிக்கவே மக்கள் ஆணை வழங்கினர் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எமது நாட்டில் வெளிப்படையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

தற்போது கொழும்பு பிரதேசத்தில் பாரபட்சமின்றி வெளிப்படைத் தன்மையுடன் செயற்படும் பல நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படும் நிலை காணப்படுவதாகவும், இந்த விடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற முறையில் ஆராயுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

சமகாலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் இலத்திரனியல் ஊடகங்கள்,அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களை நசுக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக இங்கு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஊடகங்கள் சுயக்கட்டுப்பாட்டைப் பேணுவது மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறே,அரசாங்கம் ஊடகங்களை நசுக்குவது சர்வாதிகார இயல்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles