Sunday, October 12, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅடக்கம் செய்யப்பட்ட 2 வயது குழந்தையின் சடலம் மாயம்

அடக்கம் செய்யப்பட்ட 2 வயது குழந்தையின் சடலம் மாயம்

வவுனியா – இராசேந்திரகுளம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்ட இரண்டு வயது குழந்தையின் சடலம் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையின் தாயாரால் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் இது குறித்து முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீர் தாங்கி வீழ்ந்தமையினால் குறித்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்த நிலையில் கடந்த மாதம் 26 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்டது.

தாயாரினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குழந்தையின் சடலம் காணாமல் போயுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles