Saturday, February 14, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமகளுடன் உயிரை மாய்த்துக் கொண்ட தந்தை

மகளுடன் உயிரை மாய்த்துக் கொண்ட தந்தை

திருகோணமலை கந்தளாய் – பராக்கிர மாவத்தை பகுதியில் ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தந்தையும், மகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

38 வயதுடைய தந்தையும் ஆறு வயதுடைய மகளும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

திருகோணமலை – கந்தளாய் ரயில் நிலைய தண்டவாளத்தின் அருகே தந்தையும், மகளும் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததாகவும், ரயில் வந்ததும் தந்தையும், மகளும் ரயிலின் முன்னே குதித்ததாகவும் நேரில் பார்த்த சாட்சியங்கள் குறிப்பிடுகின்றன.

உயிரிழந்த இருவரின் சடலமும் பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles