Tuesday, July 22, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாதுகாப்புச் செயலாளரால் எழுதப்பட்ட பாடல் - புத்தகங்கள் வெளியாகின

பாதுகாப்புச் செயலாளரால் எழுதப்பட்ட பாடல் – புத்தகங்கள் வெளியாகின

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவினால் எழுதப்பட்ட ‘தாராகே ஆகமனய’ மற்றும் “கடொல் எத்து” (மொழிபெயர்ப்பு நூல்) மற்றும் “எஹே கந்துலெலி” பாடல் வெளியீட்டு விழா நேற்று (06) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கொழும்பு ஆனந்த வித்தியாலய குலரத்ன மண்டபத்தில் நடைபெற்றது.

இரண்டு நாவல்களின் முதல் பிரதிகளை ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன ஜனாதிபதியிடம் கையளித்தார்.

அதன் பின்னர் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோருக்கு பிரதிகள் கையளிக்கப்பட்டன.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன எழுதிய “எஹே கந்துலெலி” பாடலுக்கு யசஸ் மெதகெதரவினால் இசையமைக்கப்பட்டுள்ளதோடு பிரபல பாடகி அபிஷேகா விமலவீர பாடல்களைப் பாடியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles