Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇறக்குமதி செய்யப்படும் இரசாயன உரங்கள் - விதைகள் தொடர்பில் அவதானம்

இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரங்கள் – விதைகள் தொடர்பில் அவதானம்

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரங்கள் மற்றும் விதைகளின் பாவனை, தரம் மற்றும் விலையை ஒழுங்குபடுத்துவதற்காக விவசாயத்திற்கான தேசிய கொள்கையை ஏற்கனவே முன்மொழிந்துள்ளதாக உணவு பாதுகாப்பு மற்றும் விவசாயம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் டி.வீரசிங்க தெரிவித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் 70 % இரசாயன உரங்களையும் 30 % சேதன உரங்களையும் விகிதாச்சாரத்தில் பயன்படுத்துவதன் மூலம் ஹெக்டேயருக்கு அதிகூடிய நெல் விளைச்சலைப் பெற முடியும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், உத்தேச தேசியக் கொள்கையில் அவற்றை உள்ளடக்கியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles