முன்னறிவிப்பு இன்றி நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் கடுமையான தீர்மானம் எடுக்கப்படுமென பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய வலியுறுத்துகின்றார்.
எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் வைத்தியசாலையில் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக நேற்று (05) தகவல் வெளியாகியிருந்தது.