கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ‘பெட் ஸ்கேன்’ (pet scan) பரிசோதனைகள் இன்னும் இரண்டு வாரங்களின் பின்னர் இடைநிறுத்தப்படுமென அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் சானக சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
அந்த இயந்திரங்களைக் கொண்டு பரிசோதனை செய்யும் தொழில் வல்லுநர்கள் சேவையிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறுவதே இந்த நிலைமைக்குக் காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
கண்டி தேசிய வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் புற்று நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் ‘LINEAR ACCELERATOR’ இயந்திரங்கள் பல மாதங்களாக செயல்படாமல் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.