புதிய கொவிட் திரிபு உலகம் முழுவதும் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய திரிபு பைரோலா அல்லது பிஏ.2.86 என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் அல்லது அடைப்பு, இருமல் மற்றும் தலைவலி ஆகியவை இந்த புதிய கொவிட் திரிபின் அறிகுறிகளாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த திரிபானது ஓமிக்ரான் திரிபை விட வேறுபட்டது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, இஸ்ரேல், கனடா, டென்மார்க், தென்னாபிரிக்கா, சுவீடன், நோர்வே, சுவிட்சர்லாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இந்த கொவிட் திரிபு இனங்காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.