Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎந்தவொரு தேர்தலையும் அரசாங்கம் ஒத்திவைக்காது

எந்தவொரு தேர்தலையும் அரசாங்கம் ஒத்திவைக்காது

எந்தவொரு தேர்தலையும் அரசாங்கம் ஒத்திவைக்காது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (05) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலோ அல்லது எந்தவொரு தேர்தலோ ஒத்திவைக்கப்பட மாட்டாது என்பதில் எவ்வித சந்தேகமும் ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.
ஒவ்வொரு தேர்தலும் குறித்த திகதியில் சட்டரீதியாக நடத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles