Monday, June 9, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலிட்ரோ எரிவாயு விலையில் இன்று திருத்தம்

லிட்ரோ எரிவாயு விலையில் இன்று திருத்தம்

லிட்ரோ எரிவாயுவின் விலையில் இன்று (04) திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதன் விலையில் திருத்தம் இடம்பெறும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் 1 மெட்ரிக் டன் எரிவாயுவின் விலை 103 அமெரிக்க டொலரை கடந்துள்ளதாகவும் அதன் காரணமாக எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இன்று முற்பகல் 10 மணியளவில் லிட்ரோ நிறுவனம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, விலை திருத்தம் எவ்வாறு இடம்பெறும் என்பது குறித்து அறிவிக்கவுள்ளது.

இறுதியாக கடந்த ஜூலை மாதம் எரிவாயு விலை திருத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles