ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பேஸ்புக் ஊடாக மரண அச்சுறுத்தல் விடுத்தமைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
எப்பாவல – மெதியாவ பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் வியாழன் (07) தம்புத்தேகம மற்றும் எப்பாவல பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்னைப்பர் கையாளும் ஒருவர் உள்ளாரா? நாட்டை நாசப்படுத்தியவன் வருகிறான்’ என்று அந்த இளைஞன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
இந்த இடுகையைக் கண்டுபிடித்ததும்,குற்றப் புலனாய்வுப் பிரிவினர் துரிதமாகச் செயல்பட்டு, அந்த இளைஞனை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.