Monday, November 18, 2024
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிதைக்கப்பட்ட 238.5 மில்லியன் நாணயத்தாள்கள் அழிப்பு

சிதைக்கப்பட்ட 238.5 மில்லியன் நாணயத்தாள்கள் அழிப்பு

இலங்கை மத்திய வங்கி கடந்த ஆண்டு சேதமடைந்த அல்லது சிதைக்கப்பட்ட 238.5 மில்லியன் நாணயத்தாள்களை அழித்துள்ளது.

மத்திய வங்கியின் கூற்றுப்படி, 2022 இல் அழிக்கப்பட்ட நோட்டுகளின் பெறுமதி 207.3 பில்லியன் ரூபாவாகும்.

நாட்டில் சுத்தமான மற்றும் தரமான நோட்டுகளின் புழக்கத்தை உறுதி செய்வதற்காக மத்திய வங்கி அவ்வப்போது சிதைக்கப்பட்ட நாணயத் தாள்களை அழித்து வருகிறது.

மத்திய வங்கி 2021 இல் 108.2 மில்லியன் ரூபா மதிப்புள்ள நாணயத்தாள்களை அழித்ததுடன் அதன் பெறுமதி 44.3 பில்லியன் ரூபாவாகும்.

2020 ஆம் ஆண்டில் 127.3 மில்லியன் மதிப்பிழந்த நாணயத் தாள்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் அதன் பெறுமதி 62.2 பில்லியன் ரூபாவாகும்.

மேலும், 2019 ஆம் ஆண்டில்இ 139.8 பில்லியன் ரூபா பெறுமதியான 235 மில்லியன் நாணயத்தாள்கள் மத்திய வங்கியினால் அழிக்கப்பட்டுள்ளன.

2018 ஆம் ஆண்டில் மொத்தமாக 343.8 மில்லியன் சிதைக்கப்பட்ட நாணயத் தாள்கள் அழிக்கப்பட்டதுடன் மத்திய வங்கியின் படி புழக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட நோட்டுகளின் மதிப்பு 252.2 பில்லியன் ரூபாவாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles