Sunday, November 17, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாய்ச்சலுக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமி கையை இழந்தார்

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமி கையை இழந்தார்

காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எட்டு வயது சிறுமியின் கை கடந்த 4 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்களினால் சத்திரசிகிச்சை மூலம் துண்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமிக்கு சுமார் நான்கு நாட்களாக காய்ச்சல் இருந்ததாகவும், தனியார் வைத்தியர் ஒருவர் அவருக்கு சிகிச்சையளித்தும் குணமடையாததால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பிரிவுக்கு பொறுப்பான தாதி, சிறுமியின் கையில் கேனுலாவை பொருத்தியதால், படிப்படியாக அவரது கை செயலிழக்க தொடங்கியது.

அதற்கமைய, மருத்துவர்கள் அதனை வைத்திய நிபுணர்களிடம் அறிவித்ததையடுத்து, சிறுமியின் உயிரை காப்பாற்றும் வகையில், அவரது கையை உடனடியாக அகற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சிறுமியை அறுவை சிகிச்சை அரங்கிற்கு கொண்டு சென்று கையை அகற்றி சிறுமியின் உயிர் காப்பாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த யாழ் இந்துக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுமியோ இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

கெனுலாவில் ஏற்பட்ட கோளாறினால் இந்த நிலை ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என கண்டறிய இரண்டு வைத்தியர்கள் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னரே சம்பவம் தொடர்பில் உறுதியான முடிவுக்கு வர முடியும் எனவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles