Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உலகம்கனடாவில் திருமண நிகழ்வொன்றில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

கனடாவில் திருமண நிகழ்வொன்றில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

கனடா – ஒட்டோவா பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

திருமண நிகழ்விற்கு திடீரென வருகை தந்த நபர் ஒருவர் அங்கு ஒன்றுகூடியிருந்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.

அத்துடன் துப்பாக்கிப்பிரயோகத்தில் அறுவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், தப்பிச்சென்றுள்ள சந்தேக நபரை தேடி அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles