நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் கன்டெக்ட் லென்ஸ்கள் தட்டுப்பாடு நிலவி வருவதால் அனைத்து வைத்தியசாலைகளிலும் கண் சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய ‘ஸ்வஸ்த’ கணினி அமைப்பில், நேற்று (03) பிற்பகல் எந்த வைத்தியசாலையிலும் கன்டெக்ட் லென்ஸ்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கண் சத்திரசிகிச்சை காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரித்துள்ளதாகவும் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் மாத்திரம் பிரித்தானியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட சுமார் 5000 கன்டெக்ட் லென்ஸ்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.