2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
பாகிஸ்தானின் – லாகூர் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது.
இதற்கமைய, அந்த அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து 334 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக, மெஹிதி ஹசன் மிராஸ் 112 ஓட்டங்களையும், நஜ்முல் ஹொசைன் சாண்டோ 104 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில், ஆப்கானிஸ்தான் அணியின்குல்பாடின் நைப் 58 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
இந்தநிலையில், 335 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 44.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 245 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
அணிசார்பில் அதிகபடியாக, இப்ராஹித் சத்ரான் 75 ஓட்டங்களையும், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் பங்களாதேஷ் அணியின் டஸ்கின் ஹகமட் 44 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.