நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, புலத்சிங்கள, இங்கிரிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, புலத்கொஹுபிட்டிய, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட மற்றும் ருவன்வெல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இன்று இரவு 8 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும்.
அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் அஹலியகொட மற்றும் குருவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.