மருந்து இறக்குமதியாளர்களுக்கு இன்னும் 13 பில்லியன் ரூபா நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த கட்டணங்களை செலுத்துவதற்காக திறைசேரியிடம் பணம் கோரியுள்ளதாகவும், அவற்றை கட்டம் கட்டமாக விடுவிக்க திறைசேரி ஒப்புக்கொண்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நிலுவைத் தொகையை செலுத்தாததால், சில மருந்து இறக்குமதியாளர்கள் மருந்துகளை இறக்குமதி செய்வதில் தயக்கம் காட்டுவதாகவும், தற்போது நாட்டில் அத்தியாவசிய மருந்துகளின் தட்டுப்பாடு 161 ஆக குறைந்துள்ளதாகவும் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்த மருந்துகள் அனைத்தும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த சில வாரங்களில் அவை பல கட்டங்களாக இலங்கையில் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.