Saturday, February 14, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டு6 இலட்சம் பயனாளிகளுக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை

6 இலட்சம் பயனாளிகளுக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை

அஸ்வெசும திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள மேலும் சில பயனாளர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிதி, நாளை(01) முதல் வங்கிகளுக்கு விடுவிக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

சுமார் 06 இலட்சம் பயனாளிகளுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகிறது. மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அஸ்வெசும கொடுப்பனவை செலுத்துவதற்காக மாத்திரம் நேற்றைய தினம்(30) அரச வங்கிகள் திறக்கப்பட்டன.

முதலாம் கட்டத்தின் கீழ் 8 இலட்சம் குடும்பங்களுக்காக அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இதற்கான நிதி திறைசேரியில் இருந்து கடந்த 28 ஆம் திகதி வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles