Tuesday, November 19, 2024
26.1 C
Colombo
செய்திகள்விளையாட்டுமுதல் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி

முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி

2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் ஆரம்பப் போட்டி இன்று (30) பாகிஸ்தான் அணிக்கும் நேபாள அணிக்கும் இடையில் பாகிஸ்தானின் முல்தான் நகரில் நடைபெற்றது.

பாகிஸ்தானின், முல்தான் மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் 238 ஓட்டங்களால் அபார வெற்றியை பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 06 விக்கட்டுகளை இழந்து 342 ஓட்டங்களை பெற்றது.

பெறுமதிமிக்க இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம், 109 பந்துகளில் 10 – பௌண்டரிகளுடன் தனது 19வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.

அணித் தலைவருக்கு ஆதரவை வழங்கிய இப்திகா அகமது 67 பந்துகளில் சதம் விளாசினார், பாபர் அசாம் 151 ஓட்டங்களைப் பெற்றார்.

இருவரும் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 214 ஓட்டங்கள் குவித்து பாகிஸ்தான் அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.

அதன்பின் களம் இறங்கிய நேபாள அணியால் 23 ஓவர்கள் 4 பந்துகளை எதிர்கொண்டு 104 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

சிறப்பான பந்துவீச்சில் ஈடுபட்ட ஷதாப் கான் 06 ஓவர்கள் 06 பந்துகளை மாத்திரம் வீசி 27 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

நேபாள அணியின் சோம்பல் கமி மாத்திரமே அதிக ஓட்டங்களை பெற்றார்.

இந்தநிலையில், பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles