Monday, August 4, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகெப் விபத்தில் 15 பேர் காயம்

கெப் விபத்தில் 15 பேர் காயம்

ராகலை – வலப்பனை பிரதான வீதியின் ஹரஸ்பெத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை வலப்பனை பிரதேசத்தில் உள்ள கோவிலுக்கு சென்று மீண்டும் திரும்பும் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கெப்பின் பின்புறம் உள்ள பகுதியொன்று உடைந்து வீழ்ந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டள்ளது.

காயமடைந்தவர்கள் வலப்பனை மற்றும் ரிகில்லகஸ்கட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை ராகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles