அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில், மழையுடனான காலநிலை அதிகரிக்ககூடும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், அடுத்த 24 மணித்தியாலங்களில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணம், பொலன்னறுவை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யக்கூடுமெனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.