மேல் மாகாணத்தை உள்ளடக்கிய இலங்கைப் போக்குவரத்துச் சபையின் சார்பில் 50 மின்சாரப் பேருந்துகளை முதற்கட்டமாக அரச-தனியார் கூட்டுத் திட்டமாக கொள்வனவு செய்யப்படவுள்ளது
இத்திட்டத்தின் எதிர்பார்க்கப்படும் நன்மைகளை உறுதி செய்வதற்கும், அதிகமான வீதிகளுக்கு பொது போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கும் உத்தேச திட்டத்தின் கீழ் இயக்கப்படும் மின்சார பேருந்துகளின் எண்ணிக்கையை சுமார் 200 ஆக அதிகரிப்பது மிகவும் பொருத்தமானது என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 02-27-2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்,உத்தேச திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்படும் மின்சார பஸ்களின் எண்ணிக்கையை 200 ஆக அதிகரிப்பதற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.