Saturday, March 28, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டு16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய மாமா கைது

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய மாமா கைது

தனது சகோதரியின் 16 வயது மகளை கர்ப்பமாக்கிய மாமனார் இன்று (30) கைது செய்யப்பட்டதாக திம்புலபத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

திம்புலபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பகுதியில் உள்ள விலங்கு பண்ணை ஒன்றில் தனது பெற்றோர் வேலை செய்து வருவதாகவும், தனது 24 வயதான மாமனார் மூன்று மாதங்களாக வீட்டில் தன்னை வன்புணர்ந்ததாக குறித்த சிறுமதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மகளுக்கு மூன்று மாதங்களாக வயிற்றில் பிரச்சினை இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்ததையடுத்து, மகளை வைத்திய பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததையடுத்து, அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டதாக திம்புலபத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

மருத்துவப் பரிசோதனையின் பின்னர், பாடசாலை மாணவியின் தாயார் திம்புலபத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, சந்தேகநபரான மாமா கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles